என் மலர்
உள்ளூர் செய்திகள்
மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
- நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
- மகா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அய்யம்பேட்டை:
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மேற்கு மாத்தூர் கிராமத்தில் மருந்தீஸ்வரர் என்கின்ற பெரிய நாயகி உடனாய ஒளதபுரீஸ்வரர் கோவில் மற்றும் 15 கிராம தேவதை கோவில்கள் உள்ளது.
மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்குஇக் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து சிற்பங்களுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து குடமுருட்டி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது. இதையடுத்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள், வாணவெடிகள் முழங்க கிராம பரிவார தெய்வங்களுக்கும் அதையடுத்து பெரிய நாயகி, மருந்தீஸ்வரர் விமானங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவிற்கு தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பராமாசாரிய சுவாமிகள், தஞ்சை அரண்மனை மூத்த இளவரசர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.