search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்
    X

    கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

    • தற்போது எல்லா விதமான பொருட்களின் மீதும் மத்திய அரசு வரி போட்டு உள்ளது.
    • வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என மத்திய அரசு கூறி வருகிறது.

    தஞ்சாவூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய பிரசார இயக்கம் நடந்து வருகிறது.

    அதன்படி இன்று தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மூத்த தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியின் தவறான கொள்கைகளே காரணமாகும்.

    பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல வகையான பொருட்களின் விலையை மத்திய அரசை தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்கிறது.

    இதற்கு தீர்வு தான் என்ன என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விளக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தான் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி வருகிறோம்.

    சமீபத்தில் நடந்த 75-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அவற்றை தீர்ப்பதற்கு நாங்கள் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று தான் பிரதமர் பேசி இருக்க வேண்டும்.

    ஆனால் பிரதமர் அவ்வாறு பேசவில்லை.

    தற்போது எல்லா விதமான பொருட்களின் மீதும் மத்திய அரசு வரி போட்டு உள்ளது.

    வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.

    பிறகு எப்படி வேலை கொடுப்பீர்கள். விவசாயிகள் போராடினால் தற்காலிகமாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர்கள் போராட்டம் முடிந்த பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்து அடிக்கிறது மத்திய அரசு. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீர வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே சாத்தியமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×