search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை உணவு திட்டம் பயனுள்ளதாக உள்ளது முதல்-அமைச்சருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆசிரியர்கள் நன்றி
    X

    மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை கலெக்டர் லலிதா வழங்கினார்.

    காலை உணவு திட்டம் பயனுள்ளதாக உள்ளது முதல்-அமைச்சருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆசிரியர்கள் நன்றி

    • குழந்தைகளின் பசிப்பிணி நீங்கிவிடும். பசிப்பினி நீங்கிவிட்டால் மனநிறைவுடன் குழந்தைகள் கல்வி கற்பார்கள்
    • கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் காலை உணவு சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை :

    உலகிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் அரசு தொடக்க பள்ளி மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 16-ந் தேதி முதல் நகராட்சி தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு த்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மயிலாடுதுறை நகராட்சி களில் 11 நகராட்சிப் பள்ளிகளில் 395 மாணவ, மாணவியர்களுக்கும், சீர்காழி நகராட்சியில் 7 நகராட்சி பள்ளிகளில் 176 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 18 நகராட்சிப் பள்ளிகளில் 571 மாணவ, மாணவியர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தினால் குழந்தைகளின் பசிப்பினி நீங்கிவிடும்.

    பசிப்பினி நீங்கிவிட்டால் மனநிறைவுடன் குழந்தைகள் கல்வி கற்பார்கள் என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பற்றி மயிலாடுதுறை கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரிர் அமுதவள்ளி கூறும்பபோது,உலகிலேயே முதன் முறையாக நமது தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய நமது முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இடைநிலை ஆசிரியர் சிவகாமசுந்தரி கூறும்போது:-

    முதலமைச்சர் கொண்டு வந்த காலை உணவு வழங்கும் திட்டம் சிறந்த திட்டமாகும்.

    எங்கள் பள்ளியில் வசதி குறைந்த மாணவர்கள் படிக்கின்றனர். நிறைய பெற்றோர்கள் தின கூலி வேலைக்கு செல்கின்றனர்.

    அதனால் அவர்களின் குழந்தைகள் காலை உணவு சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முதலமைச்சர் அறிவித்த காலை உணவு திட்டத்தால் குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்கு வருகி ன்றனர் என்றார்.

    கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேகலா கூறும்போது, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சருக்கு ரொம்ப நன்றி எள்றார்.மாணவியின் பெற்றோர் சரளா கூறும்போது,

    நான் மயிலாடுதுறை மாவட்டம் பெரிய சாலிய தெருவில் வசித்து வருகிறேன.

    காலை உணவு திட்டம் பயனுள்ளதாக உள்ளது முதல்-அமைச்சருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆசிரியர்கள் நன்றிஎனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. என்னுடைய மகள் பவித்திரசக்தி கவிஞர் வேதநாயக நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். காலை உணவு திட்டம் என் குழந்தைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.

    Next Story
    ×