search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் பகுதியில் திட்ட பணிகளை மேயர் ஆய்வு
    X

    ஓசூர் பகுதியில் திட்ட பணிகளை மேயர் ஆய்வு

    • 6 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
    • குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? என அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் மேயர் சத்யா கேட்டறிந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 1, 2-வது வார்டிற்குட்பட்ட ஜூஜூவாடி , உப்கார் லேஅவுட், ஆபீசர் காலனி, திருவள்ளூர் நகர், ராஜாஜி நகர், காந்தி ரோடு, ஜெய்பீம் நகர், நேதாஜி நகர், எஸ்.எல்.வி.நகர், பி.டி.ஆர் நகர் பகுதியில் மண் சாலையை, தார் சாலையாக மாற்றும் திட்டம் மற்றும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 6 கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் பணிகளை மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரம், அதன் உயரம், அகலம் குறித்தும், மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படுகிறதா? என அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும் மேயர் சத்யா கேட்டறிந்தார்.

    இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் அசோக் ரெட்டி, தரன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×