search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
    X

    கே.வி.கே.நகர் மெயின் ரோட்டில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி மாநகராட்சியை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

    • முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வந்தன.இதனால் சாலையோரங்களில் இருந்த முட்செடிகள் அகற்ற பட்டன.
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியை சிறப்பாக செய்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனியாக பிரித்து போடும் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது இடங்களில் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

    இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் அப்போது அவர் கூறுகையில்,

    நமது மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார், ஏற்கனவே மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகளை மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்துமாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.கே.நகர் மெயின் ரோட்டில் அதிகமான வாகனங்கள் செல்லும் தென்பகுதி முழுவதும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து கிடந்தன,முட்புதர்கள் அதிகமாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வந்தன.

    இதனால் முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதனைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் செடிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    முதல் கட்டமாக கே.வி.கே. சாமி நகர் சாலையோரங்களில் இருந்த முட்செடிகள் அகற்ற பட்டன.

    இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில்,மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் பணியை சிறப்பாக செய்து ஆட்சிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

    அதன்படி தூத்துக்குடியில் பணிகள் நடந்து வருகிறது. மாநகர பகுதியில் உள்ள முட்செடிகள் அனைத்தையும் அகற்றி முட்செடிகள் இல்லாத நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார், நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் ரங்கசாமி முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார் சுகாதார அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×