search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலம் உருக்காலை நிர்வாகத்தின் சார்பில் மற்றுத்திறனாளிகளுக்கு உதவி  வழங்க அளவீடு செய்யும் முகாம்
    X

    முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    சேலம் உருக்காலை நிர்வாகத்தின் சார்பில் மற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்க அளவீடு செய்யும் முகாம்

    • சேலம் உருக்காலை நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • 96 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கான அளவு எடுத்துகொண்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் உருக்காலை நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தாரமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 96 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கான அளவு எடுத்துகொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட வர்களுக்கு ஊன்றுகோள், செவிதிரன் கருவி, செயற்கை கால், பேட்டரி சைக்கிள், கையுரை, வீல்சேர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தனர்.

    இதற்கான கருவிகள் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கலகத்தில் தயார் செய்து வருகிற டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

    இந்த முகாமில் சேலம் உருக்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் உலகநாதன், வெங்கடாசலபதி, ஆகியோறும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன், பேச்சு பயிற்சி நிபுணர் ஸ்ரீ தேவி மற்றும் எக்காம்வெல் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த கல்வி திட்ட சிறப்பு பயிற்று னர்கள், முட நீக்கு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×