search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம், துரை வைகோ மனு
    X

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் ம.தி.மு.க., தலைமை கழக செயலாளர் துரை வைகோ மனு அளித்த காட்சி.

    காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம், துரை வைகோ மனு

    • தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை விவசாயிகளுடன் சந்தித்து மனு வழங்கினேன்.

    கோவில்பட்டி:

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கடந்த டிசம்பர் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை விவசாயிகளுடன் சந்தித்து மனு வழங்கினேன்.

    வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 3-ன் கீழ் இருக்கும் காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் இருக்கும் பட்டியலில் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்போது தான் காட்டுப் பன்றிகளை அழிக்க அரசின் முன் அனுமதி தேவைப்படாது. கடந்த 2016-ம் ஆண்டு, காட்டுப் பன்றிகளை தீங்கு விளைவிக்கும் உயிரினமாக அறிவித்து அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர, உத்தரகாண்ட் மற்றும் பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி ஓராண்டுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது.

    அதேபோல, காட்டுப் பன்றிகளை அட்டவணை 5-ன் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதுவரை இடைக்கால தீர்வாக, கேரள அரசைப் போல, தமிழ்நாடு வனத் துறை மூலம் உள்ளாட்சி அமைப்பு களுக்கு அதிகாரம் கொடுத்து கிராமக் குழுக்கள் மூலம் காட்டுப் பன்றிகளை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், வன விலங்கு சட்ட நடை முறைகளைப் பார்த்து விட்டு, அரசு அதிகாரி களிடமும் கலந்தாலோ சித்து, உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி யளித்தார்.

    Next Story
    ×