search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் மருத்துவம்- கண் பரிசோதனை முகாம்
    X

    கண் சிகிச்சை முகாம் நடந்தபோது எடுத்தபடம்.

    கோவில்பட்டியில் மருத்துவம்- கண் பரிசோதனை முகாம்

    • முகாமில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பணி செய்தனர்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி புதுகிராமம் பகுதியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், நாடார் உறவின் முறை சங்க பொது நல மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டணமில்லா பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமினை நடத்தினர்.

    முகாமிற்கு நாடார் சங்க பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் தலைமை தாங்கினார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் மற்றும் பொதுநல மருத்துவமனை செயலாளர் எம்டிஎம்.தங்கராஜ், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    முகாமில் தோல் மருத்துவர் சாரங்கபாணி, மகப்பேறு சிறப்பு மருத்துவர் கமலா சுதன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஜெய செல்வராணி, எலும்பு முறிவு மூட்டு நோய் சிறப்பு மருத்துவர் பாலகிருஷ்ணன், காது மூக்கு தொண்டை நிபுணர் பாலசுப்பிரமணியன், உட்பட 10-க்கும் மேற்பட்ட சேவை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பணி செய்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேதுரத்தினம், ராஜவேல், ராஜு, கோபால்சாமி, செல்வமோகன், தயாளமோகன், ஜெயபால், ரத்தினகுமார், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×