என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்
- மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ எதிரே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
- மேலும் இப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ எதிரே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மேட்டுப்பாளையம், சிக்கதாசம்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் விளையாட்டு மைதானமும் உள்ளது. ஆனால் அந்த மைதானம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.
மேலும் பள்ளியில் மாணவர்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியும் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உணவு இடைவெளி நேரத்திலும், மற்ற நேரங்களிலும் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதுமட்டுமல்லாமல் சுமார் 6 ஏக்கர் பரபப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பான முறையில் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் பள்ளியின் வளாகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி நிர்வாக அதிகாரிகள் பள்ளியில் நேரில் ஆய்வு செய்து பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைப்பதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர்கள் கூறுகையில், இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்டன.
சுற்றுச்சுவர்கள் 5-க்கு மேற்பட்ட இடங்களில் இடிந்த நிலையில் உள்ளது. இதனால் விடுமுறை தினங்களில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் சமுக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.