search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று  கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாடு
    X

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்த மூதாட்டி.

    மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாடு

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதியில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
    • அமைச்சர், அதிகாரிகளிடம் வாரத்தில் ஒரு நாள் கந்தபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதியில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது மூதாட்டி ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து எனது ஊர் கந்தவபுரம் நான் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள உதிர மாடன் குடியிருப்புக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் வாரத்தில் ஒரு நாள் எங்கள் ஊரிலே ரேஷன் கடை திறந்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக அதிகாரிகளிடம் கலந்துரையாடல் நடத்தி வாரத்தில் ஒரு நாள் கந்தபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அப்போது உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணை சேர்மன் மீராசிராசுதீன், உடன்குடிகிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி, செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், இளைஞரணி பாய்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.கவினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×