என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி 38-வது வார்டு பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்
- அமைச்சர் கீதாஜீவனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
- கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங் களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வா தாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட மீகா தெரு, ஜெயலானிதெரு, கோழி முடுக்கு சந்து, மற்றும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டார்.
அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜெயலானி தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும். கோழி முடுக்கு சந்து பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்து கழிநீர் செல்வதற்கு கால்வாய் வசதிகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் போது பழைய சாலையை தூர்வாரி, பழைய சாலை அளவுபடியே அமைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். முழுமையாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர மருத்துவ அணி அமைப் பாளர் அருண்குமார், கவுன்சிலர் மும்தாஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் கங்கா ராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட பிரதிநிதி பாஸ்கர், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, ஜெயராமன், கணேசன், திலகர், வைரமுத்து, மாரியப்பன், மற்றும் மணி, அரபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்