search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகூர் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    நாகூர் அரசு ஆஸ்பத்திரியில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    நாகூர் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. ஆய்வு

    • மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார்.
    • மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, அங்கு வரும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார்.

    குறிப்பாக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவம னையில் ஆய்வு செய்த அவர், மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கேட்டறிந்தார்.

    மேலும், நாகூர் தர்கா அலங்காரவாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அங்கிருந்த பதிவேட்டை ஆய்வு செய்தார். மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நாகை நகர்மன்ற தலைவர்மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகர்மன்ற உறுப்பி னர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×