என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வள்ளியூரில் பல் ஆஸ்பத்திரியில் பணம் கொள்ளை
- பணியாளர்கள் அனைவரும் இரவு பணிகள் முடிந்து ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு சென்றனர்.
- அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது
நெல்லை:
வள்ளியூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் பல் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பணிகள் முடிந்து பணியாளர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியை பூட்டிவிட்டு சென்றனர்.
அதனைத்தொடர்ந்து மறுநாள் காலை வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தபோது அங்கு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் டாக்டரான குமரி மாவட்டம் ஆலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முகமது ஹாசன்(வயது 52) வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய பஸ் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.