search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல்: குடியிருப்புகளில் சுற்றித்திரிந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
    X

    குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.

    கொடைக்கானல்: குடியிருப்புகளில் சுற்றித்திரிந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

    • கொடைக்கானலில் நகர் பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
    • பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக இருந்த குரங்கு கூட்டத்தை கொடைக்கானல் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் நகர் பகுதிகளில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வனவிலங்கு களான காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி உலா வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் அதிக அளவில் குரங்குகளின் நடமாட்டம் உள்ளது.

    வீடுகள், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் இவை புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டும் எழுந்து வந்தது. இந்த நிலையில் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக இருந்த குரங்கு கூட்டத்தை கொடைக்கானல் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

    மேலும் பிடிபட்ட குரங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். மேலும் பொது மக்களுக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்தி வரும் காட்டெருமை கூட்டத்தை யும் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    Next Story
    ×