என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கார்த்திகை மாத பிறப்பு: பழனிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு
- பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பழனி:
தமிழக கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேற்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர்.
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இவர்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் ரோப்கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின்இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்ல காத்திருந்தனர்.
பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.