search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணம்பாளையம், பள்ளபாளையம் பேரூராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    கண்ணம்பாளையம், பள்ளபாளையம் பேரூராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • கொசுக்கள் பெருக்கம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர்.
    • தற்போதைய சூழ்நிலையில் டெங்கு காய்ச்சல் இப்பகுதிகளில் பரவும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது.

    சூலூர்:

    சூலூர் அருகே கண்ணம்பாளையம், பள்ளபாளையம், சூலூர், இருகூர் பேருராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இப்பகுதிகளில் எக்கச்சக்கமான கொசுக்கள் பெருக்கம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் டெங்கு காய்ச்சல் இப்பகுதிகளில் பரவும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும்.

    மேலும் கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தப்படுத்தி கொசுக்களின் உற்பத்தியை கட்டுபடுத்த வேண்டும். கொசு மருந்து விரைவில் அடித்து பெருகி வரும் கொசுக்களை கட்டுப்படுத்தி மக்களை நோயிலிருந்து காக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். பாப்பம்பட்டி பிரிவு, பாரதிபுரம், பள்ளபாளையம், சிந்தாமணிப்புதூர், மற்றும் ரங்கநாத புரம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே நிற்க முடியாத அளவு கொசுக்களின் பெருக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×