search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது: நெல்லையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் 10 மடங்கு அபராதம் வசூலிப்பு

    • விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதை தடுப்பதற்கு மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது.
    • புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்க கையடக்க கருவியும், உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    அபராதம் உயர்வு

    அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில் புதிய வாகன மோட்டார் சட்டம் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்க கையடக்க கருவியும், உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    அதிரடி சோதனை

    நெல்லை மாவட்டத்திலும் இந்த புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சந்திப்பு மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, சப்பாணி தலைமையிலும், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் சப்- இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், அதிவேகத்தில் சென்றவர்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி சென்றவர்களை மடக்கி பிடித்து புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி10 மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.

    அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.15 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவவர்களுக்கு ரூ.5 ஆயிரம், அதிவேகமாக கனரக வாகனங்கள் ஓட்டிய வர்களிடம் ரூ.4 ஆயிரம் என வசூலிக்கப்பட்டது.

    இன்று முதல் நாள் என்பதால் சில இடங்களில் வாகன ஓட்டிகளுககு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து மேலப்பாளையத்தை சேர்ந்த வியாபாரி இஸ்மாயில் கூறிய தாவது:-

    நான் மேலப்பா ளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறேன். தினமும் பொரு ட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கு வதற்காக டவுன் நயினார் குளம் மார்க்கெட்டுக்கு வந்து செல் கிறேன்.

    இந்த பகுதி எப்போதும் போக்கு வரத்து நிறைந்ததாகும். எனவே ஹெல்மெட் அணிந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு பயன் உள்ளதாக அமையும்.

    இதனை கருத்தில் கொண்டே அரசு அபராத தொகையை உயர்த்தி உள்ளது. எனவே இதனை நான் வரவேற்கிறேன் என்றார்.

    பாளையை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன் கூறிய தாவது:-

    நான் தனியார் இன்சூர ன்ஸ் கம்பெனி யில் வேலை பார்த்து வருகிறேன். இதனால் விபத்து வழக்கு தொடர்பாக அடிக்கடி கோர்ட்டுக்கு சென்று வருகிறேன்.

    விபத்து வழக்கு களில் சிக்கி உயிரிழ ப்பவர்கள் பெரு ம்பாலும் ஹெல்மெட் அணியாமல் சென்றவ ர்களாக இருக்கிறார்கள்.

    இதில் உயிரிழக்கும் பலர் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று உயிரிழந்ததால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இன்சூரன்ஸ் பணமும் கிடைக்காமல் போய் விடுகிறது.

    இதனை கருத்தில் கொண்டே வாகன சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்வோ ர்களுக்கு ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனை தவிர்க்க ரூ.400-க்கு ஹெல்மெட் அணிந்து செல்லலாம் என்பது என கருத்து.

    போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

    நாளுக்கு நாள் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் அதிகரிக்கிறது. நாங்கள் அபராதம் விதிக்கும் வழக்குகளில் பெரும்பாலும் மது அருந்துவிட்டு வானம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் அதிக அளவில் சிக்குகிறார்கள்.

    வாகன ஓட்டிகளின் நலன் கருதியே புதிய வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படியே நாங்கள் அபராதம் விதிக்கிறோம். பொது மக்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. எனவே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கருதி விதிமுறை களை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    Next Story
    ×