என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் சேதம் அடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
- பொதுமக்கள் இங்குள்ள குறுகிய அளவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
- இடிந்து விழும் நிலையிலும் புதர் மண்டியும் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 2 அலுவலகங்களையும் அகற்றினால் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமம் குறையும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அண்ணா சாலை நகரப் பகுதிகளில் மிகவும் பரபரப்பான சாலையாகும். இப்பகுதியில் தாலுகா அலுவலகம், குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம், சார்நிலை கருவூலம், சார்பதிவாளர் அலுவலகம், இ-சேவை மையம், குடிமைப் பொருள் வட்ட வழங்கல் அலுவலகம் என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இங்குள்ள குறுகிய அளவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
பழைய தாலுகா அலுவல கம், பழைய மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டது. ஆனால் இக்கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் இருந்தும் அகற்றாததால் கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த அலுவல கங்களுக்கு நுழையும் வழியில் முன்பு நீதிமன்றமாக இயங்கி வந்து தற்போது குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
அந்த அலுவலகத்தை பழைய தாலுகா அலுவலகத்துக்கு மாற்றவும், இடிந்து விழும் நிலையிலும் புதர் மண்டியும் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 2 அலுவலகங்களையும் அகற்றினால் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமம் குறையும். மேலும் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு வரும் வணிக வளாகப் பகுதியில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் அங்கு வரும் பொதுமக்களும் இப்பகுதி யில் தங்கள் வாகனங்களை நிறுத்தும் சூழல் உள்ளது.
தற்போது இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக சிதிலம் அடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரம மடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு அலுவலகங்கள் நிறைந்த இப்பகுதியில் முறையான சாலை வசதியையும் கார்கள் நிறுத்தும் வசதியையும் மாவட்ட நிர்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்