என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலப்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்களை அச்சுறுத்திய மலைத்தேனீக்கள்
Byமாலை மலர்28 Oct 2022 3:18 PM IST
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாலப்பட்டி மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது.
- பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாலப்பட்டி மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளை இந்த மலைத்தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்து வந்தனர். மாணவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் தேனீக்கள் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதியினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு விரைந்து, வேப்பமரத்தில் கூடு கட்டி இருந்த மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story
×