search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்
    X

    விபத்தில் காயம் அடைந்தவர்களை எம். பி., எம். எல்.ஏக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    சீர்காழி சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்

    • சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மயிலாடுதுறை:

    திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது பஸ் அதிவேமாக மோதி எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

    இவ்விபத்தில் அரசு பஸ் நடத்துனர் விஜயசாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த ஓதுவார்கள் பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பஸ்சில் பயணித்த 26 பேர் படுகாயம் அடைந்து சீர்காழி மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவ மணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பாவையிட்டு ஆய்வு செய்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், தி.மு.க மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் சீர்காழி அரசு மருத்து வமனை சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளியும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    Next Story
    ×