என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இன்று மாநகராட்சி பணியாளர்கள் இடித்து தள்ளினர்.
கடலூரில் மாநகராட்சி அதிரடி: ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு- கடைகள் இடிப்பு

- கடலூரில் மாநகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு- கடைகள் இடிக்கப்பட்டது.
- மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சகுப்பம் பெண்ணையாறு ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த இடங்களை ஆக்கிரமித்து வீடு, கடைகள் மற்றும் தடுப்பு சுவர்களை பொதுமக்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மாநகராட்சி ஆணையாளர் நாவேந்திரன் உத்தரவின் பெயரில் அந்த ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய வேண்டுமென அரசு சார்பில் முன்னதாகவே அறிவுறுத்தபட்டது. இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அருள் செல்வம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகள், 2 கடை, 4 சுற்றுசுவர் உள்ளிட்டவைகளை ஜேசிபி எந்திரத்தின் மூலம் அதிரடியாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. பின்னர் அதை அப்புறப்படுத்தினார். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்று மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.