search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
    X

    கொடைக்கானல் நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.

    கொடைக்கானல் நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

    • நகராட்சி கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக அவர்களுடனான அறிமுக ஒன்றிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
    • உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கொடைக்கானல்,

    கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றக்கூட்டம் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் நாராயணன் வரவேற்றார் இக்கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.

    சுப்பிரமணிபால்ராஜ் (அ.தி.மு.க):- நகரில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவ தில்லை. பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கவுன்சிலர்களை யார் என்று தெரியவில்லை. எனவே இதனை முறைப்படுத்த வேண்டும்.

    பரிமளா (தி.மு.க.):- நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை.

    ஆணையாளர்:- உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பிரபா ஷர்மிலி (தி.மு.க.):- நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய கூட்டுக் குழு கூட்டம் நடத்த வேண்டும். நகராட்சி கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக அவர்களுடனான அறிமுக ஒன்றிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

    ஜெயசுந்தரம் (அ.தி.மு.க.):- அரசு மூலம் சிறு வியாபாரிகளுக்கு தள்ளு வண்டி கடைகள் வழங்க ப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்க ளில் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஆணையாளர்:- இது அரசின் கொள்கை முடிவு. நாடு முழுவதும் ஏழை களுக்கு இலவச கடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் பகுதியில் சுமார் 1050 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அட்டை இல்லாதவர்கள் வருங்காலங்களில் கடை வைக்க முடியாது.

    தலைவர்:- நகரில் ஏற்பட்டு வரும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ரூ.41 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சுமார் 3.5 ஏக்கர் இடம் வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்ற னர். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அருள்சாமி (தி.மு.க.):- சீசன் தொடங்கியுள்ள நிலையில் துப்புரவு பணி யாளர்கள் அதிக அளவில் நியமிக்க வேண்டும்.

    ஆணையாளர்:- கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்க ப்பட்டுள்ளனர். இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

    மோகன் (தி.மு.க.):- நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது அல்ல. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    போஸ் (சுயேட்சை):- பாக்கியபுரம் பகுதியில் 1959 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கழிப்பறையை காண வில்லை. இதில் உள்ள 6.15 சென்ட் இடத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    ஆணையாளர்:- நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் உடனடி ஆய்வு செய்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    பரிமளா (தி.மு.க.):- தங்கள் பகுதியில் உள்ள சமுதாயக் கூடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொறியாளர்:- நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

    முடிவில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×