search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் பேரூராட்சி கூட்டம்
    X

    நிலக்கோட்டை பேரூராட்சிக் கூட்டம் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது.

    நிலக்கோட்டையில் பேரூராட்சி கூட்டம்

    • நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • ரூ.34 லட்சம் மதிப்பில் பணிகள் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத் தலைவர் முருகேசன், செயலாளர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிலக்கோட்டை - திண்டுக்கல் சாலையில் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்கவும், கோட்டை, நேருநகர், துரைச்சாமிபுரம், மணியாரம்பட்டி மற்றும் 1 முதல் 15 வார்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் என ரூ.34 லட்சம் மதிப்பில் பணிகள் செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஜோசப், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி சீமை கருவேலமரங்களை முற்றிலுமாக அகற்ற தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் சடகோபி மற்றும் ஒன்றிய பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×