என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட கோவில் ஊழியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
- கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.
- கிருஷ்ணன் உறவினர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டுசாமி (வயது 55).
கொலை
இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 15-ந் தேதி ஒரு கும்பல் இவரை வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து கிருஷ்ணன் குடும்பத்தினர், உறவினர்களிடம் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எனினும் நேற்று 5-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது.
இந்நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் உடலை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். பின்னர் இன்று காலை கிருஷ்ணனின் உறவினர்கள் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிருஷ்ணன் உடலை பெற்றுச்சென்றனர்.