என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகை பஸ் நிலையம் மேம்படுத்தும் பணி- எம்.எல்.ஏ ஆய்வு
- புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
- நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது.
இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர். எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாகை பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
பேருந்து நிலையத்திலுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதித்தல், நடைபாதையில் டைல்ஸ் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல், தார்ச்சாலை அமைத்தல், சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் கட்டுதல், புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருவதை நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஆய்வின் போது, நாகை நகராட்சி ஆணையர், செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.