என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடல் சீற்றம் காரணமாக நாகை மீனவர்கள் 3 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை
- கடல் சீற்றம் காரணமாக நாகையில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம்:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25மீனவ கிராம மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர் குறிப்பாக. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், கல்லார், புஷ்பவனம் வெள்ளபள்ளம் ஆறுகாட்டுதுறை கோடியக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான விசைப்படகுகள் பைபர் படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து ள்ளனர்.
700 க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் 3 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.