search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுனில் இருக்கைகள் இல்லாத நயினார்குளம் பஸ் நிறுத்தம்
    X

    இருக்கைகள் இல்லாமல் காணப்படும் பஸ் நிறுத்தத்தை படத்தில் காணலாம்.

    நெல்லை டவுனில் இருக்கைகள் இல்லாத நயினார்குளம் பஸ் நிறுத்தம்

    • டவுன் நயினார்குளம் பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் இல்லை.
    • இருக்கைகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நயினார்குளம் சாலையில் உள்ள சந்தி விநாயகர் கோவில் அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது.

    இந்த பஸ் நிறுத்தத்தின் மூலமாக சந்திப்பு, புதிய பஸ் நிலையம், சமாதானபுரம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு டவுனில் இருந்து செல்லும் ஏராளமானோர் பயன் அடைந்து வருகின்றனர்.

    மேலும் டவுன் ரதவீதிகளை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மாணவ-மாணவிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் புறப்பட்டு பாளை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவேண்டும்.

    நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கிச் சென்று மாநகர பகுதியில் வீடு, வீடாக விற்பனை செய்யும் வயதான பெண்களும் இந்த பஸ் நிறுத்தத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த பஸ் நிலையத்தில் தற்போது இருக்கைகள் இல்லை. இதனால் பயணம் செய்ய வரும் பயணிகள் அமர்வதற்கு வழியில்லாமல் பஸ் வரும் வரை நின்று கொண்டே இருக்கின்றனர்.

    இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல மக்கள் நலசங்கத்தின் தலைவர் அயூப் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் இன்று வரை பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனையடுத்து இன்று அவர் மீண்டும் மனு அளித்துள்ளார்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றுவிட்ட நிலையில் இனியாவது அங்கு இருக்கை அமைக்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×