என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வட்டார கல்வி அலுவலர் தேர்வை213 பேர் எழுதவில்லை
- தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.
- இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர்.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இந்த போட்டித் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் இந்த போட்டித் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய விதிமுறைப்படி தேர்வு நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் டாக்டர். உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 4 மையங்களில் நடைபெற்ற தேர்வில், மொத்தம் 1,196 தேர்வர்கள் பங்கேற்றனர். 213 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.