என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில்1008 சங்காபிஷேகம்
Byமாலை மலர்18 Sept 2023 12:50 PM IST
- பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
- விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டையில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் கடந்த 15-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது. சங்காபி ஷேகத்தை முன்னிட்டு வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்குகளுக்கு புனித நீரூற்றி அதில் பல்வேறு வகையான பூக்கள் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்னி குண்டத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதி ஹோமம் செய்தனர்.
தொடர்ந்து பஞ்சமுக ஹேரம்ப விநாயகருக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமுகஹேரம்ப விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×