என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்
- நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது.
- இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பந்தலின் முகப்பு தோற்றம் அன்பகம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது.
பிரமாண்ட பந்தல்
இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது.
இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பந்தலின் முகப்பு தோற்றம் அன்பகம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பந்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இளைஞர் அணியினர் பங்கேற்கும் வகையில் தனித்தனியாக இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பந்தல் முன்பு வாழை மரங்கள், மலர்கள் உள்ளிட்டவற்றால் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.
உற்சாக வரவேற்பு
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை சீருடையில் பங்கேற்க உள்ளனர். ஈரோட்டில் இருந்து கார் மூலம் வரும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணி அளவில் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்கி மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
இதேபோல் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போதமலைக்கு, சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை சாலை வசதி செய்யப்படவில்லை. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடும் செய்து உள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில், வெண்ணந்தூர் அருகே தேங்கல்பாளையம் பிரிவு சாலையில் மலைவாழ் மக்களின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி பொம்மைக்குட்டை மேடு மற்றும் அவர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்