search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் பகுதியில் திருட்டைத்தடுக்க தீவிர வாகன சோதனை நடத்த கோரிக்கை
    X

    பரமத்தி வேலூர் பகுதியில் திருட்டைத்தடுக்க தீவிர வாகன சோதனை நடத்த கோரிக்கை

    • வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் இளைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
    • வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, சோழசிராமணி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, ஆனங்கூர், அண்ணா நகர், பாண்டமங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாக னங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் இளைஞர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்ற னர். இவர்கள் பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வெளியூர்களுக்கு சென்றவர்களின் வீடுகள் போன்றவற்றை கண்காணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.

    அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விடு கின்றனர். இதனால் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறி கொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர்.

    இதன் காரணமாக போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் அவ்வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும்.

    எனவே, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×