search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட மானியம்
    X

    கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட மானியம்

    • ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கபிலர்மலை வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பயிர்கள் சாகுபடி மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, தேனீ வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, பழச்செடிகள் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் மானியம், அதாவது அலகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், முன்பதிவுக்கும் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×