search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நர்ஸ் மயங்கி விழுந்து திடீர் சாவு
    X

    நர்ஸ் மயங்கி விழுந்து திடீர் சாவு

    • பிரீத்தி சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
    • திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரீத்தி (27).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பா ளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 1/2 வருடங்களாக நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பால்காரர் அழைத்தபோது பால் வாங்குவதற்காக பிரீத்தி மாடியில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடிப்படியில் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரீத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரீத்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரீத்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகு றித்து பிரீத்தியின் சகோதரர் ராதா (51) நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×