என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருச்செங்கோட்டில் இந்தியா வடிவில் விளக்கேற்றி சந்திரயான் வெற்றி விழா திருச்செங்கோட்டில் இந்தியா வடிவில் விளக்கேற்றி சந்திரயான் வெற்றி விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/08/24/1937206-08.webp)
சந்திரயான் விண்கலம் நிலவில் கால் பதித்ததை முன்னிட்டு திருச்செங்கோட்டில் 108 நெய் தீபம் ஏற்றி வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
திருச்செங்கோட்டில் இந்தியா வடிவில் விளக்கேற்றி சந்திரயான் வெற்றி விழா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் கைலாசநாதர் கோவிலில் சந்திரயான் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதை முன்னிட்டு இந்தியா வடிவில் 108 நெய் தீபம் ஏற்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவிலின் சபா மண்டபத்தில் இந்தியா வடிவத்தில் விளக்கு கள் மற்றும் புஷ்பங்கள் அலங்கரிக்கப்பட்டது. சரியாக ஏழு மணிக்கு பொதுச் செயலா ளர் குமரவேல் தீபங்களை ஏற்றி வைத்தார். முதன்மைச் செயலாளர் மனோகரன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சந்திரயான் வெற்றிக்கும் இதற்காக பாடு பட்ட விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
பின்னர் சுகந்த குந்தலாம்பிகை மற்றும் கைலாசநாதருக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.