என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்ப்பு
- 2023–-24-ம் நிதி ஆண்டில், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு, சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கையில், 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், ஒசூர் அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கால்நடை பராமரிப்புத் துறை மூலம், 2023–-24-ம் நிதி ஆண்டில், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு, சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதில், மாவட்டம் ஒன்றுக்கு, 3-6 பயனாளிகள் அல்லது குறைந்த பட்சம், 3 பயனாளிகளை தேர்வு செய்து, இத்திட்டதை செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமும், தகுதி உள்ள பய னாளிகள், தங்கள் குடியி ருப்புக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்த கத்திற்கு சென்று விண்ணப் பம் அளித்து பயன்பெறலாம். விண்ணப்பம் அளிக்க கடைசிநாள், ஜூன் 12-ந் தேதி ஆகும். பயனாளி திட்ட செலவினத்தில், 50 சதவீதம் அல்லது உச்சபட்ச வரையறை களை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 625-க்கு எஞ்சி யுள்ள திட்ட செலவினத்தை, சொந்த செலவு அல்லது வங்கிக் கடன் மூலம் திரட்ட வேண்டும்.
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவை யான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகர ணங்கள் வாங்கும் செலவு, 4 மாத தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகிய வற்றுக்கான மொத்த செலவில், 50 சதவீதம் மாநில அரசால் மானியமாக வழங்கப்படும்.
ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கையில், 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், ஒசூர் அரசு கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். பயனாளிகளில் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில், 30 சதவீதம் பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பினராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்