search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிபாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் லுங்கிகள் விலையை ஒரு ரூபாய் உயர்த்த முடிவு
    X

    விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    பள்ளிபாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் லுங்கிகள் விலையை ஒரு ரூபாய் உயர்த்த முடிவு

    • ஏராளமான வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்ளமுதல் செய்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்வர்கள்.
    • விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் செயல்படுகிறது. இந்த விசைத்தறி கூடத்தில் லுங்கி, துண்டு உள்ளிட்டடை உற்பத்தி செய்யப்படுகிறது. ஏராளமான வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்ளமுதல் செய்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்வர்கள்.

    கடந்த வாரம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது. ஏற்கனவே துணிகளின் உற்பத்தி செலவு அதிகப்பு, விற்பனை தொய்வு, உற்பத்தியாளர்கள் தினமும் அதிகளவு நஷ்டத்தை சந்தித்து வரு கின்றனர். தற்போது புதிய கூலி உயர்வால் நஷ்டம் அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் தனியார் மண்டபத்தில் பள்ளிபாளையம் வட்டார லுங்கி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் தலைவர் பி.எஸ்.கே (எ) கந்தசாமி தலையைில் நடந்தது. இதில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் உற்பத்தி செய்யும் லுங்கி, மற்றும் துணிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது என உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து, பள்ளி பாளையம் வட்டார லுங்கி உற்பத்தியார்கள் சங்கத்தின் தலைவர் பி.எ ஸ்.கே. (எ) கந்தசாமி கூறியதாவது:-

    விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே துணிகளின் உற்பத்தி செலவு அதிகரிப்பு, பராமரிப்பு செல்வு, மின்கட்டணம், இதர செலவு களால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. புதிய கூலி உயர்வால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும். இதனை சமாளிக்க, வேறு வழியில்லா மல் உற்பத்தி செய்யும் லுங்ககளுக்கு, ஒரு மீட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும். அப்போது ஒரளவுக்கு சமாளிக்க முடியும். ஆனால், தற்போது சூழ்நிலை பொறுத்து, ஒரு ரூபாய் மட்டும் உயர்த்த சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×