என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் நகராட்சி பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு பணி மும்முரம்
- நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் நகரை பொறுத்த வரை கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்கங்களில் மழைநீர் தேங்கியது.
கொசுப்புழு ஒழித்தல்
இதையடுத்து நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி வாரம் தோறும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமும் 45 பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின்படி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், வீடுகளின் முன்புறம் உள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.
டெங்கு
இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி கூறுகையில் மழைக் காலங்களில் கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க நகராட்சி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்