என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
- தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
- மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.
ராசிபுரம்:
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மகளிரணி அமைப்பாளர் பாரதி வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் முருக செல்வராசன் கலந்து கொண்டு பேசினார். முடிவில் துணைச் செயலாளர் ஜெயவேலு நன்றி கூறினார்.
பாடச்சுமை
கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் நன்கு பயிலும் வகையில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 3 பருவத் தேர்வுகளை மட்டும் பள்ளியின் சூழ்நிலைக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே வினாத்தாள் வடிவமைத்து தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இணைய வழி வாராந்திர மற்றும் பருவத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இனைய வழி பணிகளை பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடு வித்துவிட்டு கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் சாதாரண நிலை இடையிலே ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் அதே நாளில் அதே சதவிகிதத்தில் அகவிலைப்படி உயர்வுகள் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.