search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி பாடிகட்டும் நிறுவனங்களுக்கு  அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டும்
    X

    லாரி பாடிகட்டும் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டும்

    • நாமக்கல்லில், வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கடந்த 40 ஆண்டாக சங்கத் தின் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜ் கவுர விக்கப்பட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில், வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

    செயலாளர் மனோ கரன் வர வேற்றார். துணைத்த லைவர்ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முறை யாக ஜி.எஸ்.டி. லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றுபெற்று, தொழில் செய்யும் லாரி பாடிகட்டும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் வாங்க, தொழில் வணிகத்துறை மூலம் 125 லட்சம் முதல் 1 கோடி வரை அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டும். நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கூட்டத்தில் கடந்த 40 ஆண்டாக சங்கத் தின் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜ் கவுர விக்கப்பட்டார். கூட்டத்தில் சங்க பொருளாளர் ராமலிங்கம், கவுரிஅம்மன் தியாகராஜன், ஆடிட்டர் ரவி, வக்கீல் கார்த்தி கேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×