என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் வழக்கத்தைவிட 323.73 மில்லி மீட்டர் கூடுதல் மழை
- நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பெய்துள்ளது.
- மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரையில் 1040.27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டர் ஆகும். கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரையில் 1040.27 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பு மழை அளவை காட்டிலும் 323.73 மில்லி மீட்டர் கூடுதலாகும்.
மாவட்டத்திலுள்ள 79 ஏரிகளில் 30 ஏரிகள்
முழுமையாக நிரம்பி யுள்ளன.
23 ஏரிகள் நிரம்பாத நிலையில் உள்ளன. மீதமுள்ள 26 ஏரிகள் பாதி அளவிலேயே நிரம்பி இருக்கின்றன. இன்னும் ஓராண்டுக்கு வேளாண் பணிகளுக்கு தேவையான நீர் இருப்பு நிரம்பிய ஏரிகள் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். நிரம்பிய ஏரி களின் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள விவசாயிகள், தேங்கியுள்ள மழை நீரை கொண்டு தற்போது நெல் மற்றும் சிறுதானியங்கள் நடவு பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் நெல் 8, 962 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 71,690 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 10,443 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 30,564 ஹெக்டேரிலும், கரும்பு 8,286 ஹெக்டேரிலும் என மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 116 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவற்றில் நெல் நாற்றங்கால் மற்றும் நடவா னது வளர்ச்சி நிலையிலும், சோளம் விதைப்பு, வளர்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை வளர்ச்சி நிலையிலும், ஆமணக்கு வளர்ச்சி மற்றும் பூப்பறிவு நிலையிலும், பருத்தி வளர்ச்சி நிலையிலும், கரும்பு வளர்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும் உள்ளன.
மேலும் தோட்டக்கலை பயிர்களில் குறிப்பாக மர வள்ளி 3,295 ஹெக்டேரிலும், சின்ன வெங்காயம் 3,411 ஹெக்டேரிலும், வாழை 2,349 ஹெக்டேரிலும், மஞ்சள் 1,722 ஹெக்டேரிலும், தக்காளி 565 ஹெக்டேரிலும், கத்தரிக்காய் 523 ஹெக்ட ரிலும், வெண்டை 337 ஹெக்டேரிலும், மிளகாய் 292 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்