என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேசிய விருது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து
- மாநகராட்சிக்கான தேசிய விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ்குமாருடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தேசிய விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகி மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, மாநகராட்சிக்கான தேசிய விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ்குமாருடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.
பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செய லாளர் கார்த்திகேயன், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி சிறக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் இந்தியாவிலேயே கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது.
முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், நான் மாநகர மேயராக பொறுப்பேற்ற பின் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், மேற்கொள்ளப்பட்ட சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக இந்தியாவிலேயே 3-வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இதனைத் தமிழக முதல்-அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்