என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவிலில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா-ராஜா எம்.எல்.ஏ., சேர்மன் உமா மகேஸ்வரி பங்கேற்பு
- சங்கரன்கோவில் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, சங்கரன்கோவில் காந்தி நகர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து அண்ணப்பிரசனதிவாஸ், ஊட்டச்சத்து உணவு திருவிழா, ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்குதல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடந்தது.
- ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை ராஜா எம்.எல்.ஏ., சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் சங்கரன்கோவில் (பொது) வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, சங்கரன்கோவில் காந்தி நகர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து அண்ணப்பிரசனதிவாஸ், ஊட்டச்சத்து உணவு திருவிழா, ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்குதல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தனர்.
இதில் 6 மாதம் முடிந்த குழந்தைகளுக்கு முதல் முறை இணை உணவு வழங்கப்பட்டது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை ராஜா எம்.எல்.ஏ., சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வழங்கினார். தொடர்ந்து பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 30- க்கும் மேற்ப்பட்ட உணவுகளை பார்வையிட்டனர்.
தாய்மார்களுக்கு ஆரோக்கியமான தாய் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான தாய் என்ற செல்ஃபி ஸ்டண்ட் வடிவமைக்கப்பட்டது. அதில் தாய்மார்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் முதல் 1000 நாட்கள் மற்றும் இணை உணவு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர் புனிதா,
நகர நிர்வாகி பிரகாஷ், தி.மு.க. நிர்வாகிகள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், அப்பாஸ்அலி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், ஜெயக்குமார், சங்கர் கோமு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் செல்வம், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர், குழந்தைகள் மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்