search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று
    X

    குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் சுப்ரமணியம் சிறப்பு விருது வழங்கியபோது எடுத்த படம்.

    குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று

    • தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம், அரசு மருத்துவமனையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என 3 கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் குமாரபாளையம் அரசு மருத்துவமனை பல அளவுகோல்களில் சிறப்பிடம் பெற்று தேசிய தரச்சான்று கிடைக்கப்பெற்றுள்ளது.

    இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:-

    குமாரபாளையம், அரசு மருத்துவமனையில் 3 கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. இதன் பலனாக தற்போது தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.

    மாவட்ட அளவில் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அடுத்து குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு இது கிடைத்துள்ளது.

    இதேபோல் லட்சயா திட்டத்தின் கீழ் மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அறை ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் 95 மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்று, சுகாதார அமைச்சர் சுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனர் கதன்தீப்சிங், லட்சயா திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளனர்.

    இந்த விருதுகள் பெற காரணமாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியா ளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தேசிய தரச்சான்று பெற்றதன் பலனாக அதிக படுக்கை வசதிகள், அதிக டாக்டர்கள், அதிக செவிலியர்கள், அதிக பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×