search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்
    X

    விழாவில் தமிழ்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனுக்கு, வள்ளலார் விருது வழங்கப்பட்டது.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம்

    • பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
    • பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், அனைத்தித்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சென்னை மற்றும் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை தஞ்சாவூர் இணைந்து அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் பெருமங்கல விழாவில் வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் பல்கலக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    இவ்விழாவில்தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநதம் பேசுகையில், மக்கள் அனைவரும் பசியில்லாமல் வாழவேண்டுமென்றால் பெண்கள் தங்களுடைய அலங்கார செலவின ங்களுக்காக செலவிடும் தொகையை குறைத்தும் ஆண்கள் தீயப்பழக்க வழக்கத்திற்காக செலவிடும் தொகையைத் தவிர்த்தும் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வ ரவேண்டும் என்றார்.

    இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவே ந்தருக்கு வள்ளலார் விருது வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் தமிழ்ப் பண்பாட்டு மையம் இயக்குனர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார்.

    கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை பா. தம்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் வாசுதேவன் இவ்விழாவிற்கு இணைப்புரை வழங்கினார்.

    இதில் டாக்டர் சிவராமன், அனைந்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×