search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் வைக்கப்பட்ட நவராத்திரி கொலு
    X

    திருச்செந்தூர் கோவிலில் வைக்கப்பட்ட கொலுவை படத்தில் காணலாம்.

    திருச்செந்தூர் கோவிலில் வைக்கப்பட்ட நவராத்திரி கொலு

    • இந்தாண்டு நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • திருச்செந்தூர் கோவிலில் சுமார் 450-க்கும் மேற்பட்ட வண்ணமயமான புதிய சிலை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையாக நவராத்திரி திருவிழாவை 10 நாள்கள் அம்மனுக்கு உகந்த நாட்களாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நட்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும் உள்ளது. நவராத்திரியை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விரதமிருந்து தெய்வங்கள், மனிதன், மற்ற உயிரினங்கள் ஆகியவற்றை சிறிய சிலை பொம்மைகளாக வடிவமைத்து கொலுவாக அடுக்கி வைத்து நாள்தோறும் பூஜை செய்வது வழக்கமாகும். அதே போல கோவில்களிலும் கொலு வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்தாண்டு நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்பிரகாரத்தில் 5 அடுக்குகள் கொண்ட செட்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரிசையாக 5 இடங்களில் வண்ண வண்ண சுவாமி, அம்மன், தேச தலைவர்கள் உள்ளிட்ட பொம்மைகளால் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட வண்ணமயமான புதிய சிலை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 மகாதேவர் சன்னிதி முன்பு தெப்பம் வைத்து முளைப்பாரியும் வளர்க்கப்படுகிறது. பக்தர்கள் கொலுவை பார்த்து வழிபடும் வகையில் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×