என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கருங்கல் அருகே கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது கருங்கல் அருகே கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/10/20/1779660-9.jpg)
கருங்கல் அருகே கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரிவாளுடன் பால் பிள்ளை வீட்டில் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது அரிவாளால் பால்பிள்ளையை தாக்கினார்,
- இதுகுறித்து பால்பிள்ளை கருங்கல் போலீசில் புகார் செய்தார்.புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பிள்ளையை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பிகளான கிருஷ்ண குமார், விஜிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கருங்கல், அக்.20-
கருங்கல் அருகே பருத்திவிளை மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்பிள்ளை (வயது 35) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சிவலிங்கம் மகன்கள் கிருஷ்ணகுமார், விஜி குமார் ஆகியோருக்கும் குடும்ப கோவில் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ணகுமார் மற்றும் விஜிகுமார் ஆகியோர் அரிவாளால் தாக்கியதில் பால்பிள்ளை காயமடைந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று அவர்கள் அரிவாளுடன் பால் பிள்ளை வீட்டில் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது அரிவாளால் பால்பிள்ளையை தாக்கினார்,
இதுகுறித்து பால்பிள்ளை கருங்கல் போலீசில் புகார் செய்தார்.புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பிள்ளையை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பிகளான கிருஷ்ண குமார், விஜிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.