search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு அருகே    கல்குவாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
    X

    கலெக்டர் அலுகலத்தில் மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

    பாலக்கோடு அருகே கல்குவாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

    • கனிம வளங்களை வெட்டி எடுப்பதால் நீர் வளம் அனைத்தும் பாதாளத்திற்கு சென்று விட்டது.
    • 12 கிராம மக்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனு கொடுத்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    தருமபுரி,

    பாலக்கோடு அடுத்த சூடனூர் பஞ்சாயத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் கல்குவாரிகளை தடுத்த நிறுத்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

    பாலக்கோடு அடுத்த சூடனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சூடனூர், சூடனூர் காலனி, எம்ஜிஆர் நகர், சாத்தன கொட்டாய், கூலிக்கனூர், காமராஜ் நகர், எக்காண்டஅள்ளி, செட்டிப்பட்டி, நாகனூர், செட்டிப்பட்டி கூட்ரோடு, கலைஞர் நகர், உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளது.

    12 கிராமத்திலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருவது விவசாயம்.

    இந்த விவசாயத்தை நம்பி தான் பொதுமக்களாகிய நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அனைவரது வீடுகளிலும் கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளை அருகாமையில் உள்ள பெரிய கரடு உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.

    எங்களுக்கு வாழ்வா தாரமாக திகழும் பெரிய கரடு மற்றும் காமராஜ் நகர் பகுதியில் உள்ள மலைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தின் கிழக்கு பகுதியான நாகனூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள காடுகளை அழித்து 300 அடி ஆழத்திற்கும் மேல் கனிம வளங்களை வெட்டி எடுப்பதால் நீர் வளம் அனைத்தும் பாதாளத்திற்கு சென்று விட்டது.

    பஞ்சாயத்தின் நான்கு புறங்களிலும் கனிம வளத்தை வெடிவைத்து தகர்த்து எறிவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் கிராமங்களில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்துவதால் பயந்து வாழ்ந்து வருகிறோம் .எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் 12 கிராமங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சூடனூர் கிராமத்தில் நான்கு புறமும் செயல்படும் கல் குவாரிகளை தடுத்து நிறுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல் தொடர்ந்து கல் குவாரிகள் இயங்கும் பட்சத்தில் 12 கிராம மக்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனு கொடுத்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×