என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருவாரூர் மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல் திருவாரூர் மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல்](https://media.maalaimalar.com/h-upload/2022/12/10/1804563-3.webp)
ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
திருவாரூர் மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாவட்ட வருவாய் அலுவலருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
- 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவைகள் கையிருப்பில் உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ், மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது :-
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24/7 இயங்ககூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை கலெக்டர் நிலையிலான 10 குழுக்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத வகையில், புயல் சீற்றங்கள் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவையான அளவு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1,லட்சத்து 30 ஆயிரத்து 25, மணல் மூட்டைகளும், 84ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.
106 மரம் அறுக்கும் எந்திரங்கள், 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.