search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒளிவெள்ளத்தில் ஜொலித்த நெய்தல் கலைவிழா
    X

    நெய்தல் கலைநிகழ்ச்சிகள் நடந்த போது எடுத்தபடம். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஒளிவெள்ளத்தில் ஜொலித்த நெய்தல் கலைவிழா

    • முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
    • நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழர்களின் கலை,மண் சார்ந்த வாழ்வியல் முறை,பாரம்பரிய உணவு வகைகளை நினைவு கூறும் விதமாக நெய்தல் கலை விழா நேற்று மாலை வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் நேற்று தொடங்கிய நிகழ்ச்சி, வருகிற 10-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்க்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். அதேபோல் தமிழர்களின் பாரம்பரிய உணவு குறித்த ஸ்டால்கள் திறக்கப்பட்டுஇருந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் நடனக்கலைஞர்கள் பின்னணியில் நெய்தல் தமிழ் எழுத்துக்கள் பொறித்து அமைக்கப்பட்டிருந்த மேடை,பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதன் முன்பாக முன்பாக ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் நின்று நண்பர்கள் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    இதன் மூலம் நேற்றைய நிகழ்ச்சியில் செல்பி ஸ்பாட்டாக அப்பகுதி திகழ்ந்தது.நெய்தல் விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.யுடன் அமர்ந்து அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையர் சாருஸ்ரீ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்,ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×