என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து நெல்லை வாலிபர் படுகாயம்
- விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.
- கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது.
கயத்தாறு:
நெல்லை டவுன் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி ( வயது 30 ). இவர் கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
கயத்தாறு அருகே நாற்கர சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனயில் சிகிச்கைக்காக சேர்த்தனர். கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அருந்து சாலையில் விழுந்தது.
விபத்துக்குறித்து தகவல் அறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, தனிப்பிரிவு ஏட்டு பிரித்தீவிராஜ் மற்றும் போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மின்வாரிய பணியாளர்களும் விபத்து பகுதிக்கு சென்று துரிதமாக பணிகளை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.